உள்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

(UTV | கொழும்பு) –

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைருமான எடப்பாடி பழனிசாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

சென்னையில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ” செல்வந்தி” இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் கே. ராஜுவும் பங்கேற்றிருந்தார். மரியாதை நிமித்தம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக அ.தி.மு.க. தொடர்ந்தும் குரல் கொடுத்துவருவதற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் நடத்தப்பட்ட நாம் – 200 நிகழ்ச்சி குறித்தும், எதிர்வரும் 21 ஆம் திகதி மலையகத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழா தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதேவேளை, இலங்கைக்கு குறிப்பாக மலையக பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சி

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவு

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி