உலகம்

எங்களது எதிர் தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் – ட்ரம்ப்

(UTV|US) – ஈரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம். ஒரு வேளை ஈரான் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்க சொத்துகளையோ தாக்கினால், எங்களது எதிர் தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி தெரிவித்துள்ளார்.

ஈரானில் சக்தி வாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசிம் சுலேமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலேயே அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க பதிலுக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என ஈரான் சூளுரைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தகது.

Related posts

பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதி

உலகளவில் 7 இலட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை