உள்நாடு

எகிறும் கொரோனா பலி எண்ணிக்கை

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் நேற்று (12) புதிதாக 2,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 133,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 107,657 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பொலிசில் தமிதாவுக்கு ஆதரவாக சஜித்

அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

editor