உள்நாடு

ஊழியர்களை பணிக்கு அழைக்காமல் மட்டுப்படுத்துமாறு ஆலோசனை

(UTV | கொழும்பு) – அலுவலகம் அல்லது பணிபுரியும் இடம் அமைந்துள்ள இடத்திற்கு வௌி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஊழியர்களை பணிக்கு அழைக்காமல் மட்டுப்படுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த ஆலோசனையை செயற்படுத்துமாறு மாகாண சபைகள் மற்றும் பொது நிர்வாகம் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பயணங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

அமைச்சரவை அமைச்சுக்களில் மேலும் சில மாற்றங்கள்

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்