சூடான செய்திகள் 1

ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை 900 முறைப்பாடுகள்…

(UTV|COLOMBO) 2015 ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை 900 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.
மேலும் ,2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி கொஸ்கம – சாலவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கள் மற்றும் கட்டிடங்களுக்கான நட்டயீடு வழங்கும் போது மதிப்பீட்டு அதிகாரிகள் தவறான மதீப்பீடுகளை வழங்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் போது சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம தன்னிச்சையாக செயற்பட்டு அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறியுள்ளமை தொடர்பான முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டு மக்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாட்டை மேற்கொண்ட தொழிற்சங்கவியலாளர்களின் தேசிய முன்னணியை அங்கத்துவப்படுத்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித்த அலுத்கே முன்வைத்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சுங்க திணைக்களத்தின் இலங்கை சுதந்திர அரச தொழிற்சங்கம் அமைச்சரவை அமைச்சர்கள் சிலருக்கு எதிராக  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

Related posts

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம

அமைச்சர் ரவியின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்

”எங்களை கைது செய்ய எத்தனிப்பது நடக்காது” அரசியல்வாதியை எச்சரித்த சபீஸ்