உள்நாடு

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அவருக்கு எதிராக 8 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த வழக்கு தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டபோது அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

கடந்த 2007 அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது, அதன் வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு உபயோகித்தமை தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன மீது 8 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இருபது : விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி