உள்நாடு

ஊழல் குற்றச்சாட்டில் கைதான மகேஷ் கம்மன்பில விளக்கமறியலில்!

விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் கூட மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் மேலதிக செயலாளரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்தது.

2021 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள கிங்டாவோ சீவின் பயோடெக் என்ற நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத் தொகை தொடர்பான விசாரணையையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்

குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற கரிம உரத் தொகை தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட கடன் கடிதங்களைத் திறக்க அறிவுறுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவரைக் கைது செய்தது.

Related posts

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

திலும் அமுனுகமவிற்கு மற்றுமொரு அமைச்சு

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்