சூடான செய்திகள் 1

ஊழல்வாதிகளுக்கு தமது ஆட்சியில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது – சஜித்

(UTV|COLOMBO) – அரச சொத்துக்களை வீணடித்த யாருக்கும் தமது ஆட்சியில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தியத்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டாவறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், “.. மோசடியில் ஈடுபட்டவர்கள், இலஞ்சம் பெற்றவர்கள், ஊழல் புரிந்தவர்கள் போன்றவர்களை தாம் ஒருபோதும் இணைத்துக் கொள்ளப் போவதில்லை. தற்போது புதிய குழு ஒன்றின் ஊடாகவே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், இருளில் இருக்கின்ற மக்களுக்கு வெளிச்சத்தைப் போன்று உருவாகவே சஜித் பிரேமதாசவாகிய நான் முயற்சிக்கிறேன்..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆசிரியர் தாக்கியதில் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு…

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ