(UTV|COLOMBO) கையூட்டல் மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2019 தொடக்கம் 2023ம் ஆண்டு வரை நடை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழலை தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் மற்றைய நிறுவனங்கள் தொடர்பில் பொதுவில் செயற்படும் தேசிய திட்டத்தின் தேவைப்பாட்டை கருத்திற்கொண்டு இது தொகுக்கப்பட்டுள்ளது.