உள்நாடு

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

(UTV | கொழும்பு) –  ஒரு நாட்டின் குடிமக்கள் வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மனவிருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலை சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊழல் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஊழல் என்பது அபிவிருத்திக்கு மிகப்பெரிய தடையாகும், அது சமூக அல்லது பொருளாதார தளமாக இருப்பினும் சரியே. ஊழலானது நிறுவனங்கள் அவற்றின் அதிகபட்ச திறனை அடைவதைத் தடுத்து இறுதியில் ஒரு நாட்டின் வளர்ச்சியையே தடுத்துவிடுகிறது. கண்காணிப்பு பொறிமுறைகளில் உள்ள குறைபாடுகளின் காரணமாக தேவையற்ற சுரண்டல்களுக்கு இடமளிக்கும் நெருக்கடியான காலகட்டங்களில் இதனை மிகத் தெளிவாக காணலாம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிரஜைகள் ஊழலை சகித்துக்கொள்ளாதிருப்பதானது அதனை தடுப்பதற்கான சிறந்த பரிகார நடவடிக்கையாகும். எனவே தான் “சுபீடசத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் பொதுமக்களை வலுவூட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஊழலையும் வீண்விரயத்தையும் ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக நான் கருதுகிறேன்.

பெரும்பான்மை பலத்துடன் தனது வெற்றியை ஆதரித்த போது ஊழல் இல்லாத வினைத்திறனான நாட்டிற்காக தங்களின் விருப்பத்தினையும் வலுவான ஆதரவினையும் நாட்டு மக்கள் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச சேவைகளை திறம்பட பெறுவதற்கான உரிமைகள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் இலஞ்ச கோரிக்கைகளை எதிர்க்கவும் அரசாங்கத்தின் நிர்வாக பொறிமுறைகளில் அதிக பங்கேற்பு மற்றும் செயல்திறன் மிக்க பாத்திரத்தை வகிப்பதற்கு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் கலாச்சாரத்திலிருந்து இந்த நாட்டை விடுவித்து எங்கள் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த தேசத்தை பரிசளிப்பதற்கு நாம் ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி அனுரவுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது – ரிஷாட் MP

editor

சீனாவிலிருந்து 16 மெற்றிக் டொன் நிறையுடைய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

editor