அரசியல்உள்நாடு

ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தயார் – அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ

இலங்கையில் இருந்து வௌிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தயார் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் டொனால்ட் லூவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு தேவையான போதெல்லாம் ஆதரவளிக்க தயார் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய காலி மாவட்ட சுயேட்சை குழு

editor

மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு