உள்நாடு

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மேலும் 221 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காலப்பகுதியில் 40 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1480 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக்கவசங்கள் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

மேலும் 61 பேர் பூரண குணம்

சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்வு