உள்நாடு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு

(UTV | கம்பஹா)  – கம்பஹா மாவட்டடத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் இன்று(09) திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8 .00 மணிவரையில் இந்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கம்பஹா மாவட்டத்தின் சகல சதொச, கூட்டுறவு மற்றும் பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor

பல பகுதிகளில் நீர் வெட்டு