உள்நாடு

ஊரடங்கு காலப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு)- இன்றைய தினம் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் விசேட வீதித்தடைகள் போடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related posts

சோளத்திற்கு விலை நிர்ணயம்

சீமெந்துவின் விலை குறைப்பு!

வசந்த முதலிகே’வை TID இடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்