உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதேவேளை, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

ஒரு நாளில் நாடே ஸ்தம்பிதம்

இதுவரையில் 2,907 பேர் பூரண குணம்

75வது சுதந்திர தினத்தை நாடு கண்ணியத்துடன் கொண்டாட வேண்டும்