உள்நாடு

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கால பகுதியில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தக்கூடிய அரச நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 84 நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளள நிலையில், அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், நீதி அமைச்சு மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

ரயில் சேவைகள் செப்டம்பர் முதல் வழமைக்கு

நாட்டில் இருடங்கான மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!