வணிகம்

ஊடாடும் கற்றலுக்கான ஸ்மார்ட் கல்வி கருவிகளை வழங்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கிய நகர்வு

(UTV | கொழும்பு) –  உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தொடரும் தொற்றுநோய் நிலமையில் சமமான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கையில் தனது சமூக நலனை நோக்கமாகக் கொண்ட #vivocares முயற்சியினை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சியின் கீழ் vivo ஒரு நவீன ஊடாடும் smartboard இனை காலியில் உள்ள முதல் பயனாளியான ‘ஒல்கொட் மஹா ஒல்கொட் மஹா வித்தியாலயத்திற்கு ஒதுக்க முன்வந்தது. இது 1200 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதுடன், ஊடாடும் கற்றல் அலகுகளை ஊக்குவிக்குகின்றது.

#vivocares முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த vivo Sri Lankaவின் பணிப்பாளர் எலிசன் ஜின், “உலகளாவிய மற்றும் சமூக பொறுப்புள்ள வர்த்தகநாமம் என்ற வகையில் உள்நாட்டு சமூகங்களை ஆதரிப்பதிலும், அவர்களை தொழில்நுட்பத்தில் நன்மையால் வலுவூட்டுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. முழு மனதுடன் சமூகத்திற்கு பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாடசாலை சிறார்கள் எந்தவொரு தேசத்தினதும் எதிர்காலமாக இருப்பதால், பள்ளி பாடத்திட்டத்தில் அவர்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் தக்க வைத்துக் கொள்வது அவசியமாகும். இது பாடசாலைக்கு மாணவர்களின் வருகை மற்றும் இடைவிலகல் விகிதங்கள் போன்ற சிக்கல்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் உள்ளடக்கத்துக்கான ஒரு சிறிய படியாகும்,” என்றார்.

ஒல்கொட் மஹா வித்தியாலயத்தின் அதிபர், லலித் மாயாகடுவ கருத்து தெரிவிக்கையில்,” எமது பாடசாலையின் வசதியை மேம்படுத்தும் பொருட்டு இந்த smartboard இற்கு பங்களிப்பு செய்தமை தொடர்பில் vivo குழுவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இது நிச்சயமாக கற்றலை சுவாரஸ்யம் மிகுந்ததாக மாற்றுவதுடன், இந்த நிச்சயமற்ற காலங்களில் குழந்தைகளுக்கு உற்சாகமாக ஈடுபாட்டுடன் இருக்கவும் உதவும். vivoவின் இந்த முயற்சியானது இளையோரின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும் கிராமப்புற பள்ளிகளில் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தவும் உதவும்.”

vivo தொலைதூர கிராமப்புற பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மூலம் கற்றல் வளங்களையும் பொருட்களையும் எளிதில் அணுகுவதற்கும் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்டட் smartboards, 4K Ultra High Definition resolution ஐக் கொண்டுள்ளன. மேலும்USB, Wi-Fi, Screensharing, Touch Assist feature உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளன.

இத்தகைய smartboards இற்கு குறைவான பராமரிப்பே தேவைப்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது. வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் தூண்ட அவை உதவுகின்றன, இது வகுப்பறை கற்பித்தலை நன்கு புரிந்துகொள்வதற்கும் கிரகிக்கவும் வழிவகுக்கிறது. அதிக ஊடாடும் smartboards மூலம் மாணவர்களின் கற்றல் மற்றும் கிரகித்தல் திறன்களை கணிசமாக மேம்படுத்த முடியும்.

 

Related posts

சர்வதேச சேமிப்பு தினம் இன்று

அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி