உள்நாடு

ஊடக மாநாடு அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா துறைமுக அபிவிருத்தி அமைச்சில்

ஸ்ரீலங்கா விமான சேவைகள் கடந்த காலத்தில் இருந்த நிலைமையிலும் அதனைக் கட்டியெழுப்புவதற்காக மேலும் 4 ஏ 320 விமானங்களை இலங்கைக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கு எமது அமைச்சின் ஊடக நடவடிக்கை எடுத்தோம். அதன் ஊடாக தற்பொழுது ஸ்ரீலங்கா விமான சேவைகள் சிறுகச் ,சிறுக கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபல டி சில்வா தெரிவித்தார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 03.04.2024 துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடா்ந்து தகவல் தருகையில்

கடந்த வாரம் சில ஊடகங்கள் பிழையானதும்,பொய்யான தகவல்களை பிரசுரித்து மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர். . ஆகவே தான் இந் நிறுவனங்கள் பற்றி சரியான தகவல்களை தெரிவிக்கவே இந்த விசேட ஊடக மாநாட்டினை நடத்துகின்றோம். இவ் ஊடக மாநாட்டில் துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளான செயற்பாட்டு பணிப்பாளர் உதயக்குமார், யு.குமார பணிப்பாளர் துறைமுகம்., கெப்டன் லக்ஸி சிர்வத்தன பிரதி ஹாபர் மாஸ்டர், மற்றும் இலங்கை விமான சேவையின் நிறுவனத்தின் தலைவர் அசோக்க போன்ற அதிகாரிகள் இவ் ஊடக மாநாட்டில் சமுகமளித்திருந்தனர் .

கடந்த காலகட்டத்தில் இலங்கை விமான சேவைகள் விழுந்து அதனைக் கட்டியெழுப்ப முடியாத நிலையில் இருந்தது. இந்த நாட்டில் 60 வீதமான சுற்றுலாப் பிரயாணிகள் எமது நாட்டுக்கு வருகை தருவதும் எமது நாட்டவர்களும் வெளிநாடுகளுக்கு பிரயாணத்திற்காக ஸ்ரீலங்கா விமான சேவை ஊடகவே சேவைகளைப் பெருகின்றனர்
.
ஆகவே தான் அமைச்சரவை அனுமதியுடன் 4 விமானங்களை டென்டர் முறை மூலம் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தோம். தற்பொழுது ஏ 320 விமானங்கள் 10 தேவையாக உள்ளது.23 விமானங்களில் 18 மட்டுமே சேவையில் உள்ளது. இரண்டு விமானங்கள் . ஏப்ரல் நடுப்பகுதியில் மேலும் ஒரு விமானமும் வர உள்ளது . இவ் விமானங்களை நாங்கள் குத்தகை அடிப்படையில் பல்வேறு டென்டர்முறைப்படியும் , சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் பல்வேறு அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கொண்ட டென்டர் குழு ஊடகவே கொள்முதல் செய்கின்றோம். இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஒன்றரை வருடங்கள் சென்றுள்ளன.தற்பொழுது எம்மிடம் இருந்து 15 விமானங்கள் மட்டுமே சேவையில் உள்ளன. அதில் 3 விமானங்கள் பழுது பார்க்கும் நிலையில் உள்ளன. இவ் விமானங்களை வாங்குவதற்காக 6 மாத கால தவனை அடிப்படையில் திரைசேரி உதவியது.என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஒரு விமானத்திற்கு 8ஆயிரம் இலட்சம் செலுத்த வேண்டியுள்ளது. எமது நாட்டுக்கு சிறந்த விமான சேவையை நாம் இலங்கை விமான சேவை ஊடகாவே யெல்படுத்துவதற்கு குறைந்தது ஏ 320 முப்பது விமானங்கள் இருத்தல் வேண்டும். தற்போதைய நிலையில் எமது விமான சேவைகள் அபிவிருத்தி கண்டு வருகின்றது.
அதேவேளை ஊடகங்களில் கடந்த வாரம் அமேரிக்காவில் இருந்து கொழும்பு வர இருந்து கப்பலொன்று பாலத்தில் இருந்து மோதுண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவ் கப்பலில் சீனா செல்வதற்காக 54 கொள்களனில் ஒரு கொள்களன் மட்டுமே கொழும்பு வர இருந்தது. அவ் கப்பல் அபயகரமான வெடிப்பொருட்கள், அல்லது இரசாயணம், பெயின்ட் போன்ற தீப்பற்றக் கூடியதாக இருக்கும் அது இலங்கை வர வில்லை. அது இங்கு வந்து இரண்டு நாளே எமக்கு என்ன உள்ளது. அதனை யார் இறக்குமதி செய்வது என்பது தெரிய வரும் அதற்கு முன்னர் எமக்கு எவ்வித தகவலும் தெரியாது. இவ் விடயம் பற்றி பிழையான தகவல்களை தெரிவித்துள்ளனத எனவும அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்

 

-(அஷ்ரப் ஏ சமத்)

 

Related posts

நான்கு நாடுகளுக்கான தபால் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்