உள்நாடு

ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் – இருவர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இருவர் ஆவர்.

பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி வந்த ஊடகவியலாளர் கீத் நொயார், 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர்கள் உட்பட சந்தேக நபர்கள் சிலர் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் சேர வேண்டாம்

டிலான் பெரேராவுக்கு கொவிட்

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை