உள்நாடு

ஊடகவியலாளர் எக்னெலிகொட வழக்கு : 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் பிணை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 09 புலனாய்வு அதிகாரிகளின் பிணையை நிரந்தர உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

கிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் கேணல் ஷம்மி குமாரரத்ன உட்பட 09 புலனாய்வு அதிகாரிகளின் பிணையை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் இந்த வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான திருக்குமாரின் சாட்சியம் இன்று நிரந்த உயர் நீதிமன்ற நீதியரசரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து சந்தேகம் எழுந்துள்ளது.

இதன்படி 09 புலனாய்வு அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

ஆசிரியர்களாக பணிபுரிய விருப்பமுள்ள அரச சேவையாளர்களுக்கு

போராட்டங்களை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு அமைச்சர் ஜீவன் கோரிக்கை.