உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கு உடனடி அன்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றுக்கு வருகை தரவுள்ள ஊடகவியலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் போது, பாராளுமன்றுக்கு வருகைதரும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் உடனடி அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அன்றைய தினம் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன வருமான அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற இருவர் கைது

ஈஸ்டர் தாக்குதல் : மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு