வகைப்படுத்தப்படாத

ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

(UDHAYAM, COLOMBO) – ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்ததாக, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்து, இன்று தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், இரகசியமாக உள்நுழைந்தமை மற்றம் அலைபேசியை கொள்ளையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு, 30 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்த தீர்ப்பை இன்று வழங்கினார்.

தொம்பே பிரதேசத்தில் வசிக்கும் துருலாந்து அன்டனி ரம்சன் ஜோர்ஜ் என்ற சந்தேக நபருக்கு எதிராக, சட்டமா அதிபர் ஊடாக, 3 குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினமொன்றில், பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள மெல் குணசேகரவின் வீட்டில் அவரை கொலை செய்ததாக, சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நபர், வர்ணம் பூசுவதற்காக மெல் குணசேகரவின் வீட்டுக்கு, அதற்கு முன்னர் வந்திருந்தவர் என, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Two schoolgirls swept away by floodwaters; body recovered

டமஸ்கஸ்சில் குண்டு வெடிப்பு ; 35 பேர் பலி

இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி, ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு மீதான நெறிமுறைகளை பின்பற்ற நுகர்வோர் விவகார அதிகார சபை இணக்கம்!