உள்நாடு

ஊஞ்சல் கயிற்றால் பலியான குழந்தை!

(UTV | கொழும்பு) –

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயது குழந்தை ஒன்று நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கயிறு சிக்கியே குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை பிரசாந்த் தனோஷ் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

APICTA 2024 இல் பிரகாசிக்கும் இலங்கை மாணவர்கள் கௌரவிப்பு

editor

இன்னும் தீர்மானிக்கவில்லை – சந்திரிக்கா

editor