வணிகம்

உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலையில் உயர்வு

(UTV | கொழும்பு)- அண்மையில் சந்தையில் பாரிய குறைவாக விற்பனையாகிய வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துள்ளது.

அதற்கமைய உள்ளூர் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் விலை 105 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையில் கடந்த வாரங்களில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 50 -55 ரூபாயில் விற்பனையாகியுள்ளது.

மாத்தளை, தம்புள்ளை, சீகிரியா மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் பிரதேசங்களில் இருந்து பெரிய வெங்காயம் சந்தைக்கு கொண்டுவருவதற்கு ஆரம்பித்ததனை தொடர்ந்து இவ்வாறு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு

தழிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இளைஞர் முகாமின் நோக்கம்

கட்டழகானதும் நம்பிக்கையானதுமான Stonic அறிமுகமானது