உள்நாடு

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

(UTV | கொழும்பு) –     உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இலங்கையின் பொது மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

அதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிப்பதற்காக, இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கையின் பொது மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

அது தொடர்பில், இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையும் இந்திய அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்,

இதேவேளை குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உள்ளுர் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது மற்றும் இலக்கு திட்டத்தினூடாக நீண்ட கால அடிப்படையில் இலங்கையை பாலில் தன்னிறைவு அடையச் செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

மு.க வின் தேசிய பட்டியல் ஹரீசுக்குகண்டியில் ரவூப் ஹக்கீம்

editor

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு