உள்நாடு

உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுகோரல்

(UTV | கொழும்பு) – 2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணிக் கொள்வனவுக்காக உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, உற்பத்தியாளர்கள் 5 பேர் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, உடன்பாடு தெரிவிக்கப்பட்ட விலைக்கு பாடசாலை சீருடைத்துணிகளை, குறித்த விபரக் குறிப்புக்களுக்கமைய உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், அவற்றைப் பிரித்து, பொதியிட்டு கோட்டக் கல்வி வலயங்களுக்கு விநியோகிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

பஸ் கட்டணங்கள் குறையலாம்!

ராஜகிரிய விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி

சிறைக்கைதியின் வழிநடத்தலில் போதைப்பொருள் கடத்திய நபர் கைது