அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மீண்டும் கூடவுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடுகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேர்தல்கள் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறையாகும்.

குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, இத்தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

பரீட்சைகள் திணைக்களத்திற்கு அருகில் பதற்றம்

editor

எம்பிலிபிட்டி நகர சபை தலைவர்களின் சேவை இடைநிறுத்தம்

புத்தளம் இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு- டக்ளஸ் தேவானந்தா!