உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவது என்ற நிலைப்பாட்டை தேசிய தேர்தல் ஆணையங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

செப்டெம்பர் மாதம் முதல் தேர்தலை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைப்பதை அவர்கள் ஆதரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

மாகாண சபைகள் தற்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக அதிகாரிகளால் ஆளப்படுவதாக தேர்தல்கள் தலைவர் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஏற்பாட்டிற்கு ஆணையம் உடன்படவில்லை என்று அவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

கல்முனை மாநகர- மர நடுகை வேலைத்திட்டம்.

2022 தரம் 01 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்