அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது ? அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கிய பதில் இதுதான்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதனுடன் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்காலத்தில் சபாநாயகரால் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

மழை காரணமாக கடும் வாகன நெரிசல்…

ஜனக பண்டாரவுக்கு எதிரான வழக்கு இரத்து

பாராளுமன்றை ‘டிஜிட்டல்’ ஆவண முறையில் அமைக்க திட்டம்