உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் இன்று (13) மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.
![](https://www.utvnews.lk/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0027-675x1024.jpg)
![](https://www.utvnews.lk/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0028-703x1024.jpg)
![](https://www.utvnews.lk/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0029-668x1024.jpg)