அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்று திருத்தங்கள் இன்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலம் 2025 ஜனவரி 9 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 1 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரும்.

Related posts

கரையோரப் பகுதி ஊடாக இயங்கும் ரயில்கள் மந்த வேகத்தில்..

ரவி உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேருக்கும் விளக்கமறியல்

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை