வகைப்படுத்தப்படாத

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கட்டைகள்.

(UTV|COLOMBO)-இந்தமுறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் இன்றைய தினம் அஞ்சல் திணைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளன.

அதன்படி, ஒருகோடியே 53 லட்சம் வாக்காளர்களுக்கான வாக்கட்டைகள், சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கும் அனுப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இந்தநிலையில் வாக்கட்டைகள் பகிர்ந்தளிக்கும் விசேட தினமாக எதிர்வரும் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுடம் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுக்களுக்காக இவ்வாறான வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அவர் குறிப்பிட்டார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

19 ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம்