உள்நாடுசூடான செய்திகள் 1

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF   குறைந்தபட்சம் 9% வட்டிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை,  உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், திறைசேரி உண்டியல்கள் 2024 வரை 12.4%, 2026 வரை 7.5% மற்றும் முதிர்வு வரை 5% என்ற புதிய வட்டி விகிதத்துடன் மீண்டும் வெளியிடப்படும் என்றார்.

ஏற்கனவே 50%க்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பதால் வங்கி அமைப்பு மேலும் சுமையாக இருக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

57 மில்லியன் பண வைப்பீட்டாளர்களின் கணக்கு மற்றும் பணம் பாதுகாப்பாக இருக்குமென ஆளுநர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டேவின் பிணை மனு நிராகரிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை!