உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக ஆர்.பி.எச். பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறைவரி திணைக்களத்தின் 39வது ஆணையாளர் நாயகமாக அவர் செயற்படவுள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய டபிள்யூ.ஏ.எஸ்.சந்திரசேகர 2025-02-28 முதல்அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.