வணிகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எகோ பாம் பல்வேறு வகையான விசேட உற்பத்திகளை அறிமுகம் செய்தது

(UTV|COLOMBO)-Eco Ceylon Global (Pvt) Ltd நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு வகையான பாம் உற்பத்திகளைக் கொண்ட எகோ பாம், இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில் விஸ்தரிக்கப்படுவதற்கு முன்பதாக அடுத்து வரும் ஒரு சில மாதங்களில் கொழும்பின் புறநகரங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் இந்த உற்பத்தி வரிசை விநியோகிக்கப்படவுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஏனைய பாம் வகைகளுக்கு பதிலாக சிறந்த ஒரு மாற்று உற்பத்தியை தயாரிக்கும் நோக்குடன், நாட்டில் இயற்கையாகக் கிடைக்கப்பெறுகின்ற இலங்கையிலுள்ள பாரம்பரியமான மூலிகைகள் சிலவற்றைக் கொண்டு எகோ பாம் உற்பத்தி தயாரிக்கப்படுகின்றது. மென்தோல், கற்பூரம், கராம்பு, கையாப்புடை, மிளகுக்கீரை (பெப்பர்மின்ட்) மற்றும் யூக்கலிப்டஸ் எண்ணெய் பேன்ற பல மூலப்பொருட்களைக் கொண்டுள்ள இது தயாரிக்கப்படுவதுடன், ஒரு உயர் தர உற்பத்தியை தயாரிப்பதற்கு இவை அனைத்தும் சேர்க்கப்படுகின்றன. விரிவான ஆராய்ச்சியின் மூலமாக குளிர்விப்பு மற்றும் சூடாக்கல் உணர்வினூடாக இரட்டைச் செயற்பாட்டுடன், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வேகமாக ஆற்றுவிக்கும் உத்தரவாதத்துடன் நரம்பு முடிவுகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விசேடமாக வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியளிக்கும் நறுமணத்துடன் இந்த உற்பத்தி தயாரிக்கப்பட்டுள்ளமை மிகச் சிறந்த பெறுபேறுகளைத் தருவதாக நிறுவனத்தின் ஆராய்ச்சி அணி குறிப்பிட்டுள்ளது.

எகோ பாம் சிவப்பு, எகோ பாம் வெள்ளை மற்றும் எகோ பாம் எண்ணெய் மற்றும் நுளம்பு ஒழிப்பு ஸ்ப்ரே என இலங்கை மக்களின் நலனை இலக்காகக் கொண்ட பல்வேறு உற்பத்திகள் சந்தையில் அறிமுகம் செய்ய்பட்டுள்ளன. வலிமையான, வெதுவெதுப்பான மற்றும் ஆறுதல் அளிக்கும் களிம்பான எகோ பாம் சிவப்பு, முதுகு வலி, தசைப் பிடிப்பு, சுளுக்கு, பிடிப்பு, பூச்சி கடி மற்றும் ஏனைய பல பொதுவான வியாதிகளுக்கு நிவாரணம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வியாதிகள் அனைத்திற்கும் உடனடி நிவாரணம் தரும் வகையில் எகோ பாம் வெள்ளை வடிவமைக்கப்பட்டுள்ளது. திரவ எண்ணெய் வடிவில் வெளிவந்துள்ள எகோ பாம் எண்ணெய், உடலின் பெரும் பாகங்களில் காணப்படக்கூடிய வலிகளைப் போக்குவதற்கு இலகுவாக உபயோகிக்கப்படக்கூடியது. இயற்கையான யூக்கலிப்டஸ் எண்ணெய், உலாங்கில் (சிட்ரோநல்லா புல்) மற்றும் அருகம் புல் (லெமன்கிராஸ்) போன்ற இயற்கையான சேர்க்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற ஒரு நுளம்பு ஒழிப்பு ஸ்ப்ரே இனையும் எகோ பாம் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், உள்நாட்டில் வீடுகளில் நுளம்புகளுக்கு எதிராக திறன் மிக்க பலனை வழங்குகின்றதென நிரூபிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் இந்த புதிய உற்பத்திகளின் அறிமுகம் தொடர்பில் Eco Ceylon Global (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மனோஜ் சத்துரங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ´ஒரு உள்நாட்டு தயாரிப்பு நிறுவனம் என்ற வகையில், எமது எகோ பாம் உற்பத்திகளை இன்று உங்களுக்கு பெருமையுடன் அறிமுகப்படுத்தி வைக்கின்றோம். ´எங்கெல்லாம் வலியோ, அங்கெல்லாம் பலன்´ என்ற எமது உற்பத்தியின் உறுதிமொழிக்கு உண்மையாக, அன்றாடம் ஏற்படுகின்ற வியாதிகளுக்கு உடனடி நிவாரணத்தை தமக்கு அளிக்கக்கூடிய நம்பகமான மற்றும் பாதுகாப்பான உற்பத்தியை நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளோம்,´ என்று குறிப்பிட்டார்.

Eco Ceylon Global (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான யமுனா காளியதாச அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ´சர்வதேச சந்தையிலும் விநியோகத்தை மேற்கொள்வதுடன், உள்நாட்டு வடிவத்தில் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு வர்த்தகநாமத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே Eco Ceylon Global நிறுவனத்தின் இலக்காகும். 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையில் 25மூ சந்தைப் பங்கினைக் கைப்பற்றுவதற்கு எகோ பாம் திட்டமிட்டுள்ளது. அதனை அடைந்து கொள்வதற்கு ஏதுவாக எமது நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சந்தையில் புத்தாக்கமான மற்றும் தனித்துவமான உற்பத்திகளை வடிவமைத்து, பசுமை எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளை உபயோகிப்பதற்கு நுகர்வோர் தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதையும் ஊக்குவித்து வருகின்றது,´ என்று குறிப்பிட்டார்.

´எங்கெல்லாம் வலியோ, அங்கெல்லாம் பலன்´ என்ற தனது உறுதிமொழியை எக்கோ பாம் மக்கள் மத்தியில் நிலைநாட்டி வருகின்றது. ஒட்டுமொத்த உற்பத்தி வரிசையும் கட்டுபடியாகும் விலைகளில் கிடைக்கப்பெறவுள்ளதுடன், நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதில் வேகமான மற்றும் சிறப்பான பலனை அடையப்பெற விரும்புகின்ற மக்களுக்கு சௌகரிய உணர்வைச் சேர்ப்பிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. எகோ பாம் ஆனது கவர்ச்சியான பொதியிடல் வடிவத்தைக் கொண்டுள்ளதுடன், தரத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச தர நடைமுறைக்கு ஈடானதாக உள்ளது. எந்த வயதினரும் பாதுகாப்பாக உபயோகிக்க முடியும். இலங்கையில் மருந்து வகைகளை சந்தைப்படுத்தி, விநியோகிப்பதில் முன்னிலை வகித்து வருகின்ற Emerchemie NB (Ceylon) Ltd நிறுவனத்தால் மேற்குறிப்பிட்டஅனைத்து உற்பத்திகளும் சந்தைப்படுத்தப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020 ஆரம்பம்

2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் 7-11 ஆம் திகதி வரை

சிசுமக+ ஊடாக பாதுகாப்பான கல்வியை அறிமுகப்படுத்துகிறது Union Assurance