உள்நாடு

உலக வாழ் கிறிஸ்தவ மக்களது புனித வெள்ளி இன்று

(UTV | கொழும்பு) – உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற வகையில் வீடுகளில் இருந்தே ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு ஆயர் இல்லம் கேட்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் – ரிஷாத் இடையே சந்திப்பு

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஆடைகள் வழங்கி உதவி!

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார் ? தெரிவு இன்று