உள்நாடு

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023

(UTV | கொழும்பு) –  University Ranking Sri Lanka 2023 உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம்

உலக பல்கலைக்கழகங்களின் (2023 ஆம் ஆண்டுக்கான) ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது.

இதமடிப்படையில், பல்கலைக்கழகம் அதன் முந்தைய உலக தரவரிசை நிலை 1531 இலிருந்து 1468 இற்கு முன்னேறியுள்ளதாக UOC அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தின் இணைய உள்ளடக்கம், சுயவிவரங்களில் உள்ள மேற்கோள்கள் என்பன இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக வழிவகுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு

இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]