விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

(UTV|RUSSIA)-உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று (வியாழக்கிழமை) இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 அளவில் முதல் போட்டி தொடங்குகிறது.

முதல் நாளான இன்று நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவுதிஅரேபியாவும் (ஏ பிரிவு) மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் சந்திக்கின்றன.
இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழா நடைபெற இருக்கின்றது இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளிக்க இருக்கிறார். கலைஞர்களின் நடனத்தை தவிர, ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் விழாவில் இடம் பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி – இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையில் மோதல்

அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய அணிக்கு திரில் வெற்றி

வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்