உள்நாடு

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

(UTV | கொழும்பு) –

உலக உணவுத் திட்டம் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறுவகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வறிய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுகளை வழங்கும் வேலைத் திட்டத்திற்கு உதவிக் கரம் நீட்டிவருகின்றது. அந்தவகையில், இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2,679 பயனாளிக் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான, உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் முதற்கட்ட நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலக திட்டமிடல் பிரவின் நெறிப்படுத்தலின் கீழ் இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான 15,000/- ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இந் நிகழ்வில் விஷேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.அனீஸ், உலக உணவுத் திட்டத்தின் இணைப்பாளர் எஸ்.பத்மன் மற்றும் உலக உணவுத்திட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.வின்சன் ஆகியோர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

மேலும் இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் திருமதி. பாத்திமா றிம்ஷியா அர்ஷாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். தௌபீக், நிருவாக கிராம உத்தியோகத்தர் எச்.பி.என்.யசரத்ன பண்டார, சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.எல். நௌபீர், மற்றும் இத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம். பெறோஸ் (நளீமி) மற்றும் இறக்காமம் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஜௌபர் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

மேலும் அம்பாறை மாவட்ட செயலாளர் இறக்காமப் பிரதேச செயலகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பிரத்தியேகமாக விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளை பிரதேச செயலாளரிடம் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் செய்து தருவதாக உறுதியாளித்தார்.

       

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டிற்கு வர ஆவலுடன் காத்திருக்கும் 39,000 இலங்கையர்கள்

உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேன மீது அமெரிக்கா விதித்த தடை

editor

நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்