கேளிக்கை

உலக அழகி செஸ்லி மாடியிலிருந்து வீழ்ந்து பலி

(UTV |  நிவ்யோர்க்) – கடந்த 2019 ஆம் ஆண்டு நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது30). நியூயார்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9வது மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்டின் மரணம் தற்கொலையா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என கருதப்படுகிறது.

1991 இல் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஜாக்சன் நகரில் அவர் பிறந்தார். தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் பயின்ற பின், 2017 ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.அதன் பின் வழக்கறிஞராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.

2019ம் ஆண்டு உலக அழகியாக பட்டம் வென்ற பின்னர் தமது வேலையை அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. செஸ்லி கிரிஸ்ட் மறைவுக்கு நடப்பாண்டின் உலக அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து இரங்கல் தெரிவித்துள்ளார். செஸ்லி கிரிஸ்ட் உயிரிழந்த செய்தி இதயத்தை உடைக்கும் வகையில் இருந்ததாகவும், அது நம்ப முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தொழிலதிபரான அஜித்கை பட நடிகை

தளபதி 65 ஐ தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை?