உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு 60 கோடியை கடந்தது

(UTV |  நியூயார்க்) – சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது.

பல அலைகளாக பரவி வரும் இந்த தொற்று தற்போதும் இலட்சக்கணக்கானவர்களை தினமும் பாதித்து வருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 9.41 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 10.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

2-ம் இடத்தில் உள்ள இந்தியாவில் 4.43 கோடி பேர் தொற்றால் பாதித்து உள்ளனர். 3.46 கோடி பாதிப்புகளை கொண்ட பிரான்ஸ் 3-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 கோடியை கடந்துவிட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 60 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 934 பேர் கொரோனா தொற்றால் பாதித்து இருப்பதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 64.85 லட்சமாக உயர்ந்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

கோமாவில் இருந்து மீண்டார் ரஷ்ய எதிர்கட்சித் தலைவர்

இங்கிலாந்து நாடாளுமன்ற முதல் உரையில் தாயை நினைத்து மன்னர் சார்லஸ் உருக்கம்