கேளிக்கை

உலகை விட்டும் பிரிந்தார் Chadwick-Boseman

(UTV | அமெரிக்கா) – ‘பிளாக் பேந்தர்’ படத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் (Chadwick-Boseman) புற்றுநோயால் தனது 43வது வயதில் மரணமடைந்தார்.

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சட்விக் போஸ்மேன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

புற்றுநோய் பாதிப்புக்காக கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சட்விக் போஸ்மேன், அதனை வெளிப்படையாக அறிவித்ததே இல்லை என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டிலேயே அவரது உயிர் நேற்று பிரிந்துள்ளது.

2017ஆம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘பிளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீள படத்தை தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் பிளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.

‘பிளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும், ஒட்டுமொத்த கருப்பின மக்களின் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சட்விக் போஸ்மேன். அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகத்தையே சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

சாட்விக் போஸ்மேனின் மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றது,.

பாஸ்ட் நியூஸ் குழுமமும் சாட்விக் போஸ்மேனின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Related posts

தனுஷை பென்டெடுக்கும் பிரபுதேவா

என் தந்தை கட்சியில் சேர வேண்டாம் – விஜய்

நயன்தாராவை முந்திய காஜல்