உலகம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போது உலகில் 210 இற்கும் அதிக நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,028,493 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,393,984 பேர் குணமடைந்துள்ள நிலையில், இந்த கொடிய வைரசுக்கு 276,412 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 1,322,163 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 78,616 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், உள்ளன.

Related posts

கஞ்சி பானை இம்ரானுக்கு தமிழக D.G.P எச்சரிக்கை!

உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்