(UTV | போட்ஸ்வானா ) – ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகில் மூன்றாவது பெரிய வைரம் கண்டறியப்பட்டுள்ளது.
போட்ஸ்வானா உலகின் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. இந்த நிலையில் போட்ஸ்வானாவில் சமீபத்தில் எடை அதிகமுள்ள வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் எடை சுமார் 1,098 கேரட் ஆகும். உலகின் கண்டறியப்பட்ட மூன்றாவது பெரிய வைரம் இதுவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் இரண்டாவது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில் 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1,109 கேரட் ஆகும்.
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 காரட் அளவு கொண்டதாகும்.
கொரோனா நெருக்கடி காரணமாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரத்தை ஏலத்தில் விடமுடியவில்லை என்று போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.
ஏலம் விட்ட பிற்கும் வரும் தொகையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று போட்ஸ்வானா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)