உலகம்

உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி 1500 மீன்களுடன் வெடித்து சிதறியது.

(UTV | ஜேர்மன் ) –  ஜேர்மன் தலைநகர் மிட்டேவிலுள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மீன்தொட்டி வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்லினில் உள்ள Radisson Blu ஹோட்டலில் அமைந்துள்ள Aqua Dome, என அழைக்கப்படும் இந்த மீன்தொட்டி
✔ 2003 இல் திறக்கப்பட்டது.
✔ 12.8 மில்லியன் யூரோக்கள் செலவில் உருவாக்கப்பட்டது .
✔ உலகின் மிகப்பெரிய உருளை மீன் தொட்டிக்கான உலக சாதனையையும் கைப்பற்றியுள்ளது.
✔ 15.85 மீட்டர் உயரம் கொண்டது.
✔ 100 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 1500 மீன்களைக் கொண்டிருந்தது .
✔ 1 மில்லியன் லீற்றர் நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த இந்த நீர் தாங்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெள்ளத்தால் ஹோட்டலுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டது. மீன் தொட்டி வெடித்ததில் ஏராளமான மீன்கள் இறந்தன, ஆனால் தண்ணீர் தேங்கிய இடங்களில் சில மீன்களை காப்பாற்ற முடிந்தது என்று பேர்லின் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன்தொட்டி வெடித்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று பெர்லின் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை மீன்தொட்டியிருந்து வெளியேறிய நீரால் அப்பகுதியே வெள்ளம் நிரம்பி காட்சியளித்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேயர் Franziska Giffey, இதனை “உண்மையான சுனாமி போன்றது ” என்று விவரித்துள்ளார்.

மேலும் “மீன்தொட்டி வெடித்து, 1 மில்லியன் லிற்றர் தண்ணீர் வெளியேறியது. எல்லா அழிவுகள் இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் அதிர்ஷ்டசாலிகள் . அதிகாலை 5:45 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததால் உயிர் சேதம் எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உக்ரைன் – ரஷியா முதல் கட்ட பேச்சு வார்த்தை உடன்பாடின்றி முடிந்தது

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்