இலங்கையின் கடல்சார் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வந்தடைந்துள்ளது.
இதன்படி, இலங்கையின் சரக்கு முனையம் ஒன்றுக்கு வந்த மிகப்பெரிய சரக்குக் கப்பலாக இந்தக் கப்பலை அடையாளப்படுத்த முடியும் என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவிக்கின்றது.
கொழும்பு துறைமுகம் கடல்சார் பிராந்தியத்தில் முதன்மையான மைய துறைமுகமாக மாறி வருவதுடன், உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களை இயக்கும் திறன், MSC MARIELLA கப்பலின் வருகையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு கட்டப்பட்ட MSC MARIELLA சரக்குக் கப்பல், நீளத்தில் 399.90 மீட்டர்களைக் கொண்டுள்ளது.
கப்பலின் அகலம் 61.30 மீட்டர்கள்.
இதன் சுமை திறன் 240,739.0 தொன்கள் ஆகும்.
கப்பலால் சுமக்கக்கூடிய சரக்கு அளவு 24,24 சரக்கு பெட்டிகளாகும்.
இந்தக் கப்பல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு வந்தடைந்ததன் மூலம், கிழக்கு முனையத்தின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களை இயக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, கிழக்கு சரக்கு முனையம் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப உத்திகளால் பொருத்தப்பட்ட (STS) கிரான்டி கிரேன்கள் மூலம் திறமையாகவும் பாதுகாப்பாகவும் சரக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியளிக்கப்பட்டுள்ளது.
இது, மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான இலங்கை துறைமுக அதிகார சபையின் திறன் மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.