சூடான செய்திகள் 1விளையாட்டு

உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் : நரேந்திர மோடியின் வாக்கு

(UTVNEWS | COLOMBO) – நரேந்திர மோடி, பிரதமராகும் முன் குஜராத்தில் அகமதாபாத் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்தபோது, உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ​மைதானம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த வாக்கு தற்போது நிஜமாகும் சூழ்நிலை வந்துள்ளது.

ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் தான் தற்போது உலகின் மிகப்பெரிய கிரவுண்டாக புதுப்பிக்கப்படுகிறது. 63 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த மைதானம் உருவாகிறது.

கிரிக்கெட் போட்டியை காண சுமார் 1லட்சத்து 10 ஆயிரம் பேர் பார்க்கும் படியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது.

இதில் 90 ஆயிரம் இருக்கைகள் வசதி மட்டுமே உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் அதனை முறியடிக்கும் விதமாக 20 ஆயிரம் இருக்கைகள் கூடுதலாக உள்ளது. இந்த மைதானம் செயல்பாட்டுக்கு வந்த உடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் இரண்டாவது இடத்தை பிடிக்க உள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட அறைகள், 70 கார்போரேட் பாக்ஸ்கள், நான்கு ட்ரஸ்ஸிங் ரூம்கள், மூன்று பயிற்சி மைதானங்கள், உள்அரங்கு பயிற்சி அகாடமி, ஒலிம்பிக் அளவில் நீச்சல் தடாக வசதிகள் மற்றும் 3,000 கார்கள் மற்றும் 10,000 பைக்குகள் நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

விஜயதாஸவுக்கு எதிரான தடை கோரிக்கை நிராகரிப்பு!