விளையாட்டு

உலகின் சிறந்த வீரராக முரளி

(UTV | கொழும்பு) – 21வது நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக, உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக முத்தையா முரளிதரனை விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை பெயரிட்டுள்ளது.

CricViz எனும் கிரிக்கெட் ஆய்வு நிலையத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள 30வீரர்கள் உள்ளடங்கிய பட்டியலில் முன்னிலையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இடம்பிடித்துள்ளார்.

குறித்த பட்டியலில் 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலான கிரிக்கெட் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

முரளியின் டெஸ்ட் விக்கெட்டுக்கள் 800இன் 573ஆனது 2000 ஜனவரி 1ம் திகதி முதல் 2010ம் ஆண்டு வரையில் 85 போட்டிகளில் கைப்பற்றியுள்ளது விசேடமானது.

Related posts

LPL போட்டித் தொடரின் அட்டவணை

லீவிஸ் ஹாமில்டனுக்கு சாம்பியன் பட்டம்

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி