விளையாட்டு

உலகின் சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா

(UTV | இந்தியா) – உலகின் சிறந்த இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் பும்ரா என அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பாராட்டியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் ஜேம்ஸ் பேட்டிசன் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுடன் இணைந்து விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. உலகின் சிறந்த டி20 பந்துவீச்சாளர் பும்ரா. டிரெண்ட் போல்டும் அதற்கான திறமையைக் கொண்டவர். இவர்களுடன் இணைந்து விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் சில ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். அதனால் இங்கு விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு என்றார்…”

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகியதையடுத்து ஜேம்ஸ் பேட்டின்சனை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏஞ்சலோ மேத்யூஸ் தீர்மானம்?

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?

எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் – திமுத்