உள்நாடு

உலகவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

(UTV | கொழும்பு) –   உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

அதேநேரம், கடந்த, ஆண்டு கொவிட் 19 பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆராதனைகள் இடம்பெற்றிருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

இன்று முதல் கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்கு

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor